• Fri. Mar 24th, 2023

ஐஸ்வர்யாராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பரில் வெளியானது. இந்த பட்டியலில் பிரபல நடிகையும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் பெயரும் இடம்பெற்றிருந்தது. பனாமா ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சமமன் அனுப்பப்பட்டது. இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராயின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2016 ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகை ஒன்று வெளியிட்டது. அதில், நடிகை ஜஸ்வர்யா ராய் உள்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பிரிவு 37ன் கீழ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மும்பையில் உள்ள ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. டிசம்பர் 20 ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *