நாட்டின் 77 வது குடியரசு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் மூவர்ண பலூன்களைம் சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். அதன் பின்பு காவல்துறையின் அருகில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றிய காவல் துறைக்கு பதக்கங்களும் சான்றிதழர்களும் வழங்கி பாராட்டினார் அதனைத் தொடர்ந்து

முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ , வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை வனத்துறை, நம் வாழ்வும் வாழ்ந்துக்காட்டும் திட்டம் ஆகிய பத்து துறையின் கீழ் மொத்தம் 47 பயனாளிகளுக்கு ரூபாய் 32 லட்சத்தி 11 ஆயிரத்து 202 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.






