குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்பு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட எஸ்பி பிரதீப் உடன் இருந்தார்.






