• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நமக்கொருபாதை பாடல் அரசியலா – கமர்சியலுக்காகவா?

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றிபெற்று விட்டாலே தமிழத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமே, இளைஞர்களின் விடிவெள்ளியே என கோஷமும், போஸ்டர்களும் குவியத்தொடங்கி விடும் திரைக்கதையில் இயல்பாக அமையும் வசனங்களும், பாடல்களும் அரசியலாக விவாதிக்கப்படும் இதற்கு சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் விவாத பொருளாக மாறியுள்ளது என்ன அது

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


எதற்கும் துணிந்தவன் படம் 2022 பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ‘வாடா தம்பி’ என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத்தும், ஜிவி பிரகாஷும் இணைந்து பாடியுள்ளனர். அவர்கள் இணைந்து பாடுவது இதுவே முதன்முறை.

இடையிடையே சூர்யாவின் நடனத்துடன் கூடிய இப்பாடலின் லிரிக்கல் வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது. இப்பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார். இதில் ‘நமக்கொரு பாதை.. அவசியம் தேவை’ என்ற வரியும் இடம்பெற்று உள்ளது. இந்த வரிகள் நடிகர் சூர்யாவின் அரசியல் ஆசையை சூசகமாக அறிவிப்பது போன்று உள்ளது என்ற கேள்வியும், விவாதங்களும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.