• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நிவாரண பொருட்கள் வழங்கிய துரை.சேனாதிபதி..,

ByM.I.MOHAMMED FAROOK

Dec 3, 2025
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காரைக்கால் பச்சூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பாஜக மாவட்ட செயலாளர் மித்லேஷ் குமார் ஏற்பாட்டில்  20குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு மழை நிவாரணமாக அத்தியாவசிய பொருளான பால், பிஸ்கட், சீனி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மாநில செயலாளர் துரை.சேனாதிபதி, தொகுதி தலைவர் சிவ மாணிக்கவேல் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.