• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மழைச்சாரலில் பசுமாடு இறந்த சம்பவம்..,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் வெங்கரை வாட்டாத்திக்கோட்டை கொள்ளுகாடு கீழ தெருவை சேர்ந்த தேவநேசன் விவசாயி இவர் கால்நடை வளர்த்து வந்தார் இந்நிலையில் திருவோணம் பகுதியில் தற்போது பெய்து வரும்

தொடர் கன மழையால் மலைச்சாரல் குளிர் தாங்காமல் இன்று காலை 40, ஆயிரம் மதிக்கத்தக்க கறவை பசுமாடு இறந்தது இதைக் கண்டு வேதனை அடைந்த விவசாயி தேவநேசன் கொடுத்த தகவலின் பேரில் திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வெங்கரை வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பா இடத்துக்கு விரைந்து சென்று கால்நடை இறந்தது குறித்து விசாரணை செய்து கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் பசுமாட்டினை பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழைச்சாரலில் பசுமாடு இறந்த சம்பவம் கொள்ளு காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,