இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நடைபெற்று வரும் உதவி மையத்தில் பூர்த்தி செய்த வாக்காளர் கணக்கிட்டு படிவம் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.



