• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தியின் மனசாட்சியின் உண்மையான பேச்சு..,

நான் தோற்கடிக்க பட்டிருக்கலாம், கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம்(தேர்தல் ஆணையம் துணையோடு), எனக்கு வருத்தம் இல்லை… இந்திய மக்கள் ஆகிய நீங்கள் தான் வருத்தப்பட வேண்டும்,உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன,உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும் இது தான் உண்மை.

நீங்கள் எத்தனை முறை என்னை தோற்கடித்தாலும் நான் இதில் உறுதியாக இருக்கிறேன்! நான் ஒன்றும் ஆகாமல் அழிந்து போகலாம்,அழியும் வரைக்கும் உங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பேன். நான் இல்லாத போது அந்த குரலின் வலிமையை நிச்சயமாக நீங்கள் உணர்வீர்கள், காரணம் உண்மையை நிரந்தரமாக யாராலும் மூடி வைக்க முடியாது! என் உள் மனதும் என் மனசாட்சியும் நாட்டு மக்களுக்கு இதைத்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறது.