• Tue. May 7th, 2024

பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம்”- ஸ்மிருதி இரானி

Byமதி

Dec 16, 2021

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், “இந்தியாவில் குற்றச்செயல்கள்” என்ற பெயரில் மாநிலம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் புள்ளி விவரங்களை வெளியிடுகிறது.

மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் அளித்த பதில் அளித்துள்ளார். அதில், பெண்கள் நல அமைச்சரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005ன்படி, 2016 முதல் 2020 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள்… 2016-ல் 437, 2017-ல் 616, 2018-ல் 579, 2019-ல் 553, 2020-ல் 446 என வழக்குகளின் எண்ணிக்கை உள்ளது.

உள்கட்டமைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சமூகத்தில் திறன் கட்டமைப்பு, புலனாய்வு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட 8 நகரங்களில் பாதுகாப்பான நகரத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த 8 நகரங்கள் சென்னை, பெங்களூரு, தில்லி, அமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *