உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வு நடைபெற்றது.

இதுகுறித்து கோவை கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆர்.பாலமுருகன் கூறியதாவது, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் சர்க்கரை நோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது, நோய் வந்த பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது.
வாக்கத்தான் நிகழ்வை கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர், ரோட்டரி மாவட்டம் 3206, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் சங்கங்கள், இந்திய மருத்துவ சங்க கோவை கிளை, ஆர்எஸ்எஸ்டிஐ தமிழ்நாடு கிளை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இணைந்து நடத்தியது.

இதில் கோவை இந்திய மருத்துவ சங்க கிளையின் மருத்துவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என சுமார் 500 பேர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு சஞ்சீவிகுமார், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் தேர்வு தலைவர் ரவிக்குமார், செயலாளர் மருத்துவர் கார்த்திக் பிரபு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், விழாவில் கோவை, ராம்நகர் நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர். பாலமுருகன், இந்திய மருத்துவ சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் மகேஸ்வரன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய் சிட்டி தலைவர் ஹால்துரை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கிழக்கு தலைவர் விஜயகிருஷ்ணன், ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மிட்டவுன் ஹரிபாஸ்கர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்பத்தூர் மில்லினியம் தலைவர் செபி செபஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
