புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிடுகையில் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரகுபதி

வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் இந்த ஆட்சி மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகம் மூலம் ஆணித்தனமாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூறி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் பட்டியலை பார்த்தேன் மிகவும் பெருமைப்பாக பிரமிப்பாக இருந்தது . புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் நான் ஆறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றேன். அறந்தாங்கி வீர செம்பரனா ஏரி 15 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.
புதுக்கோட்டையில் நீயோ டைட்டில் பார்க் அமைக்கப்படும்
கீரமங்கலம் பகுதியில் விவசாயிகள் நலன் கருதி சாகுபடி செய்யப்படும் பழம் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள குளிர் பதன கிடங்கு ஒரு கோடி ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டு கட்டப்பட உள்ளது. அதேபோன்று ஆவுடையார் கோவில் அருகே வடகாடு பகுதியில் உயர்மட்ட பாலம் ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது . கந்தர்வகோட்டைஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது .

தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும். இந்த ஆட்சி பின்தங்கிய பெண்களை கை தூக்கி விடும் ஆட்சி. இதுவரை 27 மாதங்களாக ஒரு லட்சத்து 16 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. இதை நான் எனது சகோதரிகளுக்கு மாதந்தோறும் அண்ணன் வழங்கும் சீராக வழங்கி வருகின்றேன். பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது . அதில் ஒன்றுதான் தாயுமானவர் திட்டம் 65 வயது நிரம்பியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றது .
இதற்கு அடுத்ததாக அன்பு கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது .இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எண்ணி எதிரிகளுக்கு (கிலி) கலக்கம் கொள்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு கொண்டுள்ளது. காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றது .அதற்கு வழிகாட்டியாக அமைந்தது தமிழ்நாடு , எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபடும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு அரசின் திட்டங்களை எதிர்த்து கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திமுக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்களில் வாக்குகளை பாதுகாக்க வேண்டிய ஒரு அமைப்பு, ஆனால் பல்வேறு மாநிலங்களில் போலி வாக்குகள் அதிகளவு உள்ளது.
பொதுமக்களின் வாக்கு உரிமை திருடப்பட்டுள்ளது. இதை ஆதாரத்துடன் எனது அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான் செயல்படுகிறேன் இவ்வாறு அவர் பேசினார். பின்னர் விழா மேடை இறங்கிய மு க ஸ்டாலின் பந்தலுக்குள் நீண்ட தூரம் நடந்து சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.











; ?>)
; ?>)
; ?>)