விருதுநகர் பாவாளி சாலையில் உள்ள முஸ்லிம் நடுநிலை பள்ளியில் மருத்துவம்,மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் MLA, A R R சீனிவாசன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாமில் கர்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை MLA ARR சீனிவாசன் வழங்கினார்.

மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் யசோதா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், அருகில் இணை இயக்குநர் காளிராஜ், நகர் மன்ற தலைவர் மாதவன்,திமுக நகர செயலாளர் SRS தனபாலன், பொதுகுழு உறுப்பினர் மதியழகன், கவுன்சிலர் மொன்னி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் MLA சீனிவாசன் உரையாற்றுகையில், தமிழகத்தில் உணவு மாற்றம் காரணமாக நோய்கள் அதிக அளவில் பரவுகின்றன,அதே நேரத்தில் இங்கு மருத்துவர்களும் அதிக அளவில் உள்ளனர் என்றார்.

முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், இருதய நலம் மற்றும்பல சிறப்பு மருத்துவர்களும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு நட்சத்திரா மகளிர் சுய உதவி குழு தலைவி ஆனந்தி,அம்பிகா ஆகியோர் தானிய உணவு வகைகளான சுண்டல் மற்றும் வேர்கடலை காலை சிறுண்டிக்கு ஸ்டால் அமைத்திருந்தனர்.














; ?>)
; ?>)
; ?>)