• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே மில்லில் தீ விபத்து!!

ByS.Ariyanayagam

Oct 28, 2025

திண்டுக்கல் அருகே தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல், பித்தளை பற்றி, ராயர்பட்டி ரோடு பகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பாக்கியலட்சுமி ஸ்பின்னிங் டெக்ஸ் மில் என்ற மில்லில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.