• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

லக்கிம்பூர் வன்முறை திட்டமிடப்பட்ட சதி: விசாரணைக்குழு

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம், லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட்டது.

அந்த விசாரணைக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்டே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இது நிரூபணமாகியிருப்பதாகவும் சிறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.