மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் உடனுறை ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.,

இந்த கோவிலின் அருகில் உள்ள தெப்பம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த சிவனடியார்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உழவார பணி மூலம் தெப்பத்தை தூர்வாரி சுத்தப்படுத்தினர்.,
இந்த தெப்பத்தை தற்போது மீண்டும் தூர்வார 55 லட்ச ரூபாய் இந்து அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.,
ஏற்கனவே தூர்வாரப்பட்ட தெப்பத்தை தூர்வார 55 லட்சம் நிதி ஒதுக்கி தற்போது பணிகளும் முறையாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.,

10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ள சூழலில், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து ஒதுக்கப்பட்ட நிதியில் தெப்பத்தை முறையாக சீர் செய்து நீர் வரத்து பகுதியை உருவாக்கி புத்துயிர் அளிப்பதோடு, மீதமுள்ள தொகையை அரசு கையக படுத்த வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,