செங்கல்பட்டை சேர்ந்த குமார்,மணிகண்டன் ஆகிய இருவரும் சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருக உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாரில( கடை எண் 11847) மது அருந்தி விட்டு காலி குவாட்டர் பாட்டிலை கொடுத்து 10 ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு பணம் தர முடியாது என்று பதில் அளித்துள்ளார் .அரசு காலி பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது என்று கூறி உள்ளார்கள். அதற்கு எங்களுக்கு உத்தரவு வரவில்லை என கூறி விரட்டி விட்டனர் . நாம் அவர்களிடம் விசாரித்த போது எங்கள் ஊரில் காலி பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கொடுக்க முடியும் போது இங்கு மட்டும்தான் கொடுக்க மறுக்கின்றனர்.

அரசு ஊருக்கு ஒரு உத்தரவூ போடுவதில்லை அரசு அறிவிக்காமல் பத்து ரூபாய் அதிகமாக விற்கும் இவர்கள் அரசு அறிவித்த உத்தரவை மதிக்காமல் அராஜகம் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.