• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு

Byமதி

Dec 14, 2021

தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் எனவும், கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும். தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி செல்லும் மாணவர்கள் ஜனவரி 3ஆம் தேதி தினசரி வகுப்புகள் கட்டயாமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.