• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Dec 17, 2025

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்ப ரேஷன் (பி) லிட், உத்தேசிக்க ப்பட்டுள்ள கல்லங்குறிச்சி சுண்ணாம்பு கன்கர் குவாரி, விஸ்தீரணம் 3.42.5 ஹெக்டேர், புல எண்கள் 39/1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 57/2, 3, 4, 5, 6 &7 மற்றும் கல்லங்குறிச்சி சுண்ணாம்பு கன்கர் குவாரி, விஸ்தீரணம் 15.14.5 ஹெக்டேர், புல எண்கள் 41/1, 41/2, 41/3, 41/4, 41/5, 41/6, 41/9, 41/10, 41/11, 41/12, 41/13 மற்றும் பிற, கல்லங்குறிச்சி கிராமம், அரியலூர் வட்டம் & மாவட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக் கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் 4D, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜராஜேஸ்வரி, அரசு அலுவலர் கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்.