புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய அருகாமையில் இருந்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் புத்தகத் திருவிழாவில் ஒருங்கிணைப்பாளர் தங்க மூர்த்தி முத்துநிலவன் மணவாளன் கவிஞர் ஜி வி மூர்த்தி கலந்துகொண்டு புதுக்கோட்டை புத்தக விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகள் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமும் மாணவ மாணவியரிடம் புத்தகத்தின் வாசிப்பு திறன்கள் குறைந்து காணப்படுவதால் புத்தகத்தினை தொடர்ந்து படிப்பதற்காக தமிழ்நாடு அரசு அறிவியல் இயக்கம் சார்பாகவும் புத்தகத்தைப் பற்றி புத்தகத்தை கையில் ஏந்தி கொண்டு விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் இருந்து தொடங்கப்பட்டது.

கீழ ராஜ வீதி வழியாக சென்று புதுக்கோட்டை நகர மன்ற வளாகம் சென்றடைந்தது புத்தக கண்காட்சி ஆனது இவர் 3 முதல் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் புத்தக கண்காட்சி திருவிழாவில் பேச்சுப் போட்டிகள் நடனப் போட்டிகள் பல்வேறு அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு நடைபெறும்.