புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்.

தரமான மருத்துவம் தருவதை தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கட்டண ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் எதிரான கட்டண கோஷங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை மாநகர தலைவர்கள் லட்சுமணன் சரவணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர தலைவர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.