கரூர், தான்தோன்றி மலை அருகே உள்ள காளியப்பனூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

அதனை ஒட்டி டாஸ்மார்க் பார் உள்ளது இதில் 24 மணி நேரமாக சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் டாஸ்மார்க் பாரில் உள்ளே சென்று பார்த்த பொழுது மது விற்பனை ஜோராக நடைபெற்று வந்துள்ளது.

அப்போது அங்கிருந்த மது பிரியர்கள் வீடியோ எடுப்பதை பார்த்தவுடன் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை கண்டித்து மதுபான டாஸ்மாக் பாரில் நாம் தமிழர் கட்சியினர் முட்டு கையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தான்தோன்றி மலை போலீசார் உள்ளே செல்லாமல் வெளியே நின்று இருந்தனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வெளியே சென்ற பொழுது கண் துடைப்பிற்காக மட்டும் போலீசார் உள்ளே சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஒருவரை மட்டும் அழைத்துச் சென்றனர்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது அதனை கண்டு கொள்ளாமல் சமையல் மாஸ்டர் ஒருவர் மது பிரியர்களுக்கு சமைத்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நன்மாறன் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அனுமதித்த நேரத்தை விட மதுபானம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகவும் அருகிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ள நிலையில் சட்ட விரோதமாக காளியப்பனூர் பகுதியில் மதுபான பார் செயல்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளிக்கும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார் இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கூடங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவித்தார்.







; ?>)
; ?>)
; ?>)