• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல -முஸ்லிம் லீக் செயலாளர்

Byமதி

Dec 12, 2021

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் அப்துரஹிமான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வக்பு வாரி கூட்டத்தில் பேசிய அப்துரஹிமான், ‘வீணா- முகமது ரியாஸ் இருவருக்கும் நடந்தது திருமணமே அல்ல. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் (ரியாஸ்) எனது பகுதியைச் சேர்ந்த மணமகன் ஆவார். அவருடைய மனைவி யார்? அது திருமணமா? விபச்சாரம். அதைச் சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்’ என்றார்.

அப்துரஹிமான் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பரப்பனங்காடியைச் சேர்ந்த முஜீப் என்பவர் அளித்த புகாரின் பேரில், அப்துரஹிமான் மீது கோழிக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.