விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. சங்கரபாண்டியபுரம், ஆர். மடத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, ஏழாயிரம் பண்ணை,உள்ளிட்ட பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதியில் வழியாக மினிவேன்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.

முன்னதாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொண்டுவரப்பட்ட சிலைகள் ஏழாயிரம் பண்ணை தெப்பத்தில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், ஆகியோர் முன்னிலையில் கரைக்கப்பட்டன. வனமூர்த்திலிங்கபுரம், விஜய கரிசல்குளம், மீனாட்சிபுரம், சல்வார்பட்டி ,வெற்றிலையூரணி, அக்கரைப்பட்டி,பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள ஊரணியில் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் கரைக்கப்பட்டன.














; ?>)
; ?>)
; ?>)