• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நடத்துநர் தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம்..,

ByP.Thangapandi

Aug 16, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன்., செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று பணிக்கு சென்ற குமரேசன், தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கி கொண்டிருந்த போது உசிலம்பட்டி அருகே முண்டுவேலன்பட்டி பாண்டி கோவில் வளைவில் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் பேருந்தை நிறுத்தி, படுகாயமடைந்த குமரேசனை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த நடத்துநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செக்காணூரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்திலிருந்து நடத்துநர் தவறி விழுந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.