• Fri. Feb 20th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

உழவர் நலத்துறை திட்ட முகாம்..,

ByK Kaliraj

Jul 25, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறையில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி வேளாண்மை அலுவலர் அன்னபூரணி எடுத்துக் கூறினர்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் அவரை, துவரை, காராமணி பயறு வகை தொகுப்பு 25 கிராம் அளவில் விவசாயிகளுக்கு இலவசமாக உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் லதா வழங்கினர்.வேளாண்மை உதவி இயக்குநர் முத்தையா நன்றி கூறினார்.