மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்து சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 433 கோடி மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முடிவுற்ற திட்டப்பணிகளை துவைக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கும் விழா மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் டெல்லி சிறப்பு பிரதிநிதி எ.கே.எஸ்.விஜயன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மற்றும் பொதுமக்கள் 5000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் 2500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் இன்று மதியம் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியில் முதல்வர் செல்ல உள்ளார்.