விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை பழைய மின்சாதன பொருட்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வந்தது.

பழைய மின் சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்ததால் முற்றிலும் புதுப்பித்து நவீன முறையில் மாற்றி அமைக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனால் நவீன முறையில் மின் சாதனங்கள் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் முன்னிலையில் பொருத்தப்பட்டன. இதன் மூலம் அணையில் உள்ள ஐந்து ஷர்ட்டர்களை எளிதாக இயக்க முடியும். என நீர் வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)
