விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா இவரது மனைவி மகேஸ்வரி வயது 65 இவர் நேற்று மதுரை ராஜா கடை தெருவில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது சிங்கராஜா கோட்டை பெரிய சாவடி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் வந்த நபர் மகேஸ்வரி அணிந்திருந்தவர் 7 அரை பவுன் செயின் பிடித்துக் இழுத்து தப்பி ஓடி உள்ளார்.

இதை அடுத்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல் போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் அருகே இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் டிவிஎஸ் இருசக்கர வாகன எண்ணெய் வைத்து சின்ன சுரைக்காய் பட்டி பகுதி சேர்ந்த பாலு மகன் வயது 22 அஜித் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட 7 அரை பவுண் நகை பறிமுதல் செய்து அஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
