• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓட்டுநருக்கு மாரடைப்பு-சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி தருணம்

Byகுமார்

Dec 9, 2021

மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பால் மரணம் – சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் இன்று வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

அதனை தொடர்ந்து பேருந்து குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துனர் ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென பெருந்த சாலையில் ஓரத்தில் நிறுத்தி ஸ்டெரிங்கின் மீது விழுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வந்தவர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் அனைவருக்கும் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.