• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அஇஅதிமுக தலைமையான கூட்டணி..,

கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியின்றி தனது அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை.

திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் கட்டிய மனக்கோட்டையை தகர்த்து எரிந்து வருகிறது. அஇஅதிமுக தலைமையான கூட்டணி.

இனிய பல கட்சிகள் கூட்டணியில் சேர போகின்றது என்று எடப்பாடியார் சொன்னதும் ஸ்டாலின் வயிற்றில் புளிக்கரைத்து ஊற்றியிருக்கிறது, வாக்குறுதிகளை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின்? நான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ஒன்று இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தீர்கள்? நான்காண்டுகள் நன்றாக பெஞ்சு தேய்த்தீர்கள் நீட் தேர்வு போனதா? நேற்று முன்தினம் திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 வது முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன, இதற்கு உங்கள் தலைவர் ஸ்டாலின் என்ன பதில் வைத்துள்ளார் நேரு அவர்களே?

இந்த ஒரே கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், நான்காண்டுகளாக திணறிக் கொண்டிருப்பது திமுக தானே? எங்களுக்கு சீட் அதிகமாக கொடுக்க வேண்டும்,திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, கூட்டணி கட்சித் தலைவர்களை திமுக மதிப்பதில்லை என்றெல்லாம் சொல்வது யார்?திமுக கூட்டணியில் உள்ள விசிக, மா.கம்யூ, மற்றும் த.வா.க ஆகிய கட்சிகள்.

1980 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பயந்து, 112 சீட்டுகளில் மட்டுமே நின்று, 122 சீட்டுகளை கூட்டணியிடம் கொடுத்து, மைனாரிட்டியாக பம்மிக் கொண்ட கட்சி திமுக தான்.

போகின்ற நிலையைப் பார்த்தால் 2026 தேர்தலில் கழக பொதுச் செயளாலர் எடப்பாடியாருக்கு பயந்து மீண்டும் மைனாரிட்டி எண்ணிக்கையிலான தொகுதிகளில் தான் நீங்கள் நிற்பீர்கள் போல?

பெட்டியை பற்றி நகராட்சி துறை அமைச்சராக இருக்கும் நேரு பெயரில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.

கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட ஸ்டாலின் மாடல் அரசு, எத்தனை பெட்டிகளை அள்ளி குவித்தது என்பதை நேரு சொல்லாவிடில் 2026 ஆண்டில் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் மக்கள் நிச்சயமாக தெரிந்து கொள்வார்கள்.

எடப்பாடியார் அவர்கள் கழகத்தின் கிளைச் செயலாளர் என்ற அடிப்படை நிலையில் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கழகத்தின் பொதுச்செயலாளராக, மக்களின் முதல்வராக இருக்கிறார்.

தன் அப்பா மடியில் ஊர்ந்து ,தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிக்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்?

எடப்பாடியார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின்ஒருமித்த ஆதரவுடன் அம்மா அவர்களுக்கு பிறகு முதல்வராக அம்மாவின்அரசை திறம்பட வழிநடத்தி,மக்களுக்காக நல்லாட்சி வழங்கினார்கள்.

அதை நேருவோ ஸ்டாலினோ மறுப்பார்கள் எனில், பேறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு நாவலர் முதல்வராக வேண்டிய சூழலில், கருணாநிதி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலில் ஊர்ந்து, மண்டியிட்டு, துதி பாடி, புரட்சித்தலைவரின் கருணை பார்வை பட்டதனால் தான் முதல்வர் ஆனார்? எங்களுக்கும் உங்கள் வரலாறு நன்றாக தெரியும் என்பதை உணர்ந்து பேசுங்கள் நேரு அவர்களே?

நாங்கள் சொன்னதில் எது பொய் என ஆதாரம் காட்டினார் பொம்மை முதலமைச்சர், அவர் நடத்திய ஆப்ரேஷன் போட்டோசூட் பற்றி ஒரு செய்தி வந்ததாக பீத்துக்கொண்டாரே அதுவா? இதெல்லாம் மக்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் நேரு அவர்களே?

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை செய்தித்தாள்களையும், ஊடகங்களைப் பார்த்து தான் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிக்கை மற்றும் பதிவை தெரிவிக்கின்றார்கள், ஸ்டாலினை பற்றி முரசொலி படித்தும், கருணாநிதி செய்தி சேனலை பார்த்து நல்லாட்சி என்று மார்தட்ட நாங்கள் ஒன்றும் குடும்பத்தின் கொத்தடிமை அல்ல?

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை மிகவும் வலுவாக இருக்கிறது, திமுக எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கிறது என்ற பீதி திமுக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஈ.டி. விசாரணை வளையத்தில் நேருவின் மகனும், தம்பியும் சிக்கியிருக்க, இன்னும் எத்தனை தம்பிகள் சிக்குவார்களோ?

எத்தனை திமுகவினர் சிறையில் கம்பி எண்ண போகிறார்களோ? என்ற மரண பீதியில் திமுக உறைந்து போய் உள்ளதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த பயத்தை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க ,2026 களத்தில் சந்திப்போம்,

அதேபோல சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அதிமுக வரலாறு தெரியாமல் பேசி உள்ளார், அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம்.இந்த இயக்கத்தில் தாய்ப்பால் குடித்து, முகவரி பெற்றவர்கள் ,செல்வாக்கு பெற்றோர்கள் இந்த இயக்கத்தை விட்டு சென்ற பிறகும் இந்த இயக்கம் வலிமையாக உள்ளது, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
.
அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெறும் தலைவர்களின் வாரிசான எடப்பாடியாரின் தலைமையின் சிறப்பாக இயங்குகிறது இது ஏழை, எளிய மக்களின் கட்சியாகும் .

இன்றைக்கு,2 கோடி தொண்டர்கள் மனம்புண்படும் படி உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார், அதிமுக யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அரைவேக்காடு தனமாக
பேசியுள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடியார் தலைமையில், தமிழக மக்கள் கட்டுப்பாட்டில், தமிழக மக்கள் இதயங்களில் உள்ளது அதில் உங்களுக்கு எந்த சந்தேகம் வேண்டாம்.

மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றிசரித்திரம் எழுதப் போகிறார் ,அதனால் உங்களுக்கு உதரல் ஏற்பட்டு உளரல் பேச்சு பேசி உள்ளீர்கள்?

திமுக தான் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது ,மன்னராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைக்கு கருணாநிதி கொள்ளு பேரன், ஸ்டாலின் பேரன், உங்கள் மகன் இன்பநிதி இன்றைக்கு கருணாநிதி டிவிக்கு பொறுப்பாளராக எந்த உழைப்பும் இல்லாமல் வந்துள்ளார் ஆகவே திமுக தான் ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளது திமுகவை தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் வைத்தது போல தமிழகத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் வர நினைத்தால்,தமிழக மக்கள் உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விடுவார்கள்.

இனி ஒரு நாளும் உங்கள் குடும்பம் இனி தமிழகத்தை ஆளப்போவது கிடையாது உதயநிதி ஸ்டாலின் அவர்களே? தமிழகத்தை இனி ஆளப்போவது எடப்பாடியார் தான்.
என மக்கள் தீர்ப்பு வழங்க உள்ளார்கள் உங்கள் உளரல் பேச்சை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறினார்.