• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் மாற்றுப்பாதையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை மனு.

Byவிஷா

Dec 7, 2021

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம், ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக வரவிருக்கும் ரயில்வே மேம்பாலம், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், இடையூறு இல்லாத வகையில், மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


சாத்தூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், மேற்கு வட்டார தலைவர் சுப்பையா, சாத்தூர் ஒன்றிய செயலாளர் இரமேஷ், சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் மாவட்டச் செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அரசன் கார்த்திக் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தார். மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் செய்யது இப்ராகிம், நகர துணைத் தலைவர்கள் ஜெயபாலன், வெள்ளைச்சாமி, வட்டார துணை தலைவர்கள் ஒத்தையால் முத்துவேல், லட்சுமணன், சாத்தூர் நகரச் செயலாளர் ஆட்டோ ராஜ்குமார், ஒன்றிய மாணவரணி தலைவர் மணிவண்ணன், தாயில்பட்டி ராஜபாண்டி, சூரங்குடி ஆறுமுகம், மேலும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..