அதிமுவில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளருக்கான போட்டியில் போட்டியின்றி இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ்-ம் தேர்வாகி இருந்தனர்.
அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக இதனை கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் கழக இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ்-ம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் தலைமையில் சாத்தூர் நகர கழக செயலாளர் M.S.K.இளங்கோவன் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் V.தேவதுரை கழக பொதுக்குழு உறுப்பினர் V.வேலாயுதம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் Ex-வைஸ் சேர்மன் G.கிருஷ்ணன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் S.T.முனீஸ்வரன் முன்னிலையில் மாவட்ட, நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள், சாத்தூர் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக சிறப்பித்தனர்.