தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வைகோ, அன்புமணி, எம்.எம் அப்துல்லா, வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த தேர்தலுக்கு ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 2இல் தேர்தல் அறிவிக்கை என்றும், ஜூன் 9 மனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 19ல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல்
