கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள கூட்செட் சாலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறும் போது :-

நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டம் போன்ற இடங்களிலே மிகக் கடுமையான மழை என வானிலை அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் எல்லா ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக கோவை மாவட்டத்தில் செய்து உள்ளதாகவும், குறிப்பாக எந்தெந்த இடங்களில் பிரச்சனைகள் இருக்கும் என்பதில் ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து அந்த இடங்களிலே தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும், தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்படுவதின் வகையிலேயே தொடர்ச்சியாக நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையாளர், ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இங்கு பணி புரிந்த வரை தான் மாநில திறன் மேம்பாட்டு கழக இயக்குனர் முதல்வர் அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.
அவருக்கு மாவட்ட முழுவதும் எங்கெங்க என்னென்ன பிரச்சனைகள் என்று தெரியும், இன்றைக்கு நாங்கள் பார்த்தது வரை மாவட்ட முழுவதும், மாநகராட்சி மட்டுமல்ல மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வால்பாறை வரை அத்தனை இடங்களிலும் மிக அருமையான முன்னேற்பாடுகளை செய்து உள்ளனர், ஒவ்வொரு துறையும் அதில் மிக கவனமாக கடந்த முறை என்ன ? பிரச்சனைகள் வந்ததோ, அந்த பிரச்சனைகள் மனதில் வைத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.
எனவே இந்த முறை எவ்வளவு ? மழை பெய்தாலும் அதை எதிர்கொள்கின்ற அளவிற்கு நம்முடைய அதிகாரிகள் மிக அருமையாக செய்திருக்கிறார்கள். இன்றைக்கு ரெட் அலர்ட் ஆக இருந்தாலும், ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டு உள்ளது. நாளைய தினம் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் எப்படி ? இருந்தாலும் அதற்கு முன்னேற்பாடுகளை மிகச் சிறப்பாக எதிர்பார்த்ததை விட அதிகமாக செய்து இருக்கிறார்கள். முதல்வர் அவர்கள் தொடர்ந்து அமைச்சரிடம் பேசி வருவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம், ஆணையரிடம் கண்காணிப்பு அதிகாரி எல்லோரிடத்திலும் அங்கு இருந்து அவர் தொடர்பு கொண்டு பேசிக் கேட்டு அறிந்ததாகவும், அதேபோல் தமிழக செயலாளர் மற்ற துறையினுடைய செயலாளர்களும் பேசிக் கொண்டு உள்ளதாகவும், எனவே சரியான முன்னேற்பாடுகள், எவ்வளவு மழை வந்தாலும், அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு எதிர்கொள்ள நடைபெறுவதாகவும், அவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அங்கு உள்ள பயணியர் விடுதியில் வைத்து என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்பதை பார்த்ததாகவும், அப்பொழுது சில இடங்களை பார்க்கலாம் என்று வந்து இருப்பதாக கூறியவர், இந்த இடங்களே கடந்த முறை நாங்கள் பார்க்கும் பொழுது மோசமாக இருந்ததாகவும், இந்த முறை முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கண்டிப்பாக இந்த முறை அந்தப் பிரச்சனை தவிர்த்து விடப்படும் என்றார், 90 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், எல்லா இடங்களிலும் என்னென்ன தேவையோ, முகாம்கள் மருத்துவர்கள் இருப்பது, போன்ற எல்லா வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்தந்த முகாம்களில் அதிகாரிகள் தனியாக பணி அமர்த்தப்பட்டதாகவும், வால்பாறைக்கு ஒரு அதிகாரி பணி அமர்த்தப்பட்டு உள்ளதாகவும், முதலில் என்னென்ன பாதிப்புகள் வருகிறதோ, அந்த இடங்களை கவனிக்க கூறி உள்ளதாகவும், அவர்களுக்கு அங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு என்ன ? தேவையோ எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும், மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறியவர், அந்தந்த ஒன்றியத்திற்கு, நகராட்சி தனியாக அதிகாரிகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரியம் என அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து பணிகள் செய்து வருவதாக தெரிவித்தவர், ஒவ்வொரு துறையிலும் அவர்கள் செய்த பணிகளின் அறிக்கை காண்பித்ததாகவும் தெரிவித்தவர், கடந்த முறை பார்த்த பிரச்சினைகளுக்கு தற்பொழுது தீர்வு ஏற்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் மழை பெய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தவர், பொதுவாக குப்பைகளை சாக்கடைகளில் போடாமல் மக்கள் தவிர்க்க வேண்டும், பல்வேறு இடங்களில் குப்பைகளை போடுவதால் சாக்கடைகள் அடைத்துக் கொள்வதாகவும், ஆனால் அடைப்பு ஏற்படுவதை மாநகராட்சி தடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.



