மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உசிலம்பட்டி மற்றும் எழுமலை பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
இந்த வாகன சோதனையில் ஜோதில்நாயக்கணூர் விலக்கில் பேருந்திலிருந்து மூட்டைகளுடன் இறங்கிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் இடைமறித்து சோதனை நடத்தியதில் 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டறியப்பட்டு 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் தொடர்பாக தாடையம்பட்டியைச் சேர்ந்த செல்வம், மாணிபமேட்டுப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்ற இருவரை கைது செய்து எழுமலை காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
எழுமலை காவல் நிலைய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் கொள்முதல் செய்து இரயில் மூலமாக மதுரைக்கும், மதுரையிலிருந்து பேருந்து மூலம் ஜோதில்நாயக்கணூர் பகுதிக்கு வந்ததாகவும், எழுமலை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்ததாக கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
