• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

70 வயது மூதாட்டியின் கைகளை உடைத்த பேரன்..,

ByKalamegam Viswanathan

May 17, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லான் என்ற நல்லுசாமி இவரது மனைவி ஆதம்மாள்(70) இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

ஆதமாலுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும் ஒரு வீடும் உள்ளது. இந்த நிலையில் மகன் முத்தையா இரண்டாவது திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். அவரின் மூத்த மனைவி வசந்தி அவரது மகன் அரவிந்த் அவ்வப்போது தங்களுக்கு சொத்தை பிரித்து தருமாறு ஆதாம்மாளிடம் வீட்டிற்கு சென்று மிரட்டுவது மின்சாரத்தை துண்டிப்பது போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆதாம்மாள் திருமங்கலம் நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு உள்ள நிலையில் நேற்று அரவிந்த் என்பவர் 70 வயது மூதாட்டியான ஆதாம்மாவின் வீட்டுக்கு போய் சொத்தை பிரித்து தர கூறி தகராறில் ஈடுபட்டு கட்டையால் மூதாட்டியை தாக்க வந்த போது மூதாட்டி கைகளை நீட்டி உள்ளார் அப்போது அரவிந்த் மூதாட்டியின் இரண்டு கைகளையும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து சென்று உள்ளார்.

தற்போது ஆதம்மாள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சொத்துக்காக தனது இரண்டு கைகளையும் அடித்து உடைத்து விட்டார்கள் என்னால் வாழ முடியவில்லை இதுகுறித்து எஸ் பி அலுவலகத்தில் மகளிர் காவல் நிலையத்தில் நாகையாபுரம் காவல் நிலையத்தில் என ஐந்து முறை புகார் அளிக்கும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று மூதாட்டி குமுறும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக பேரன்னே பாட்டியின் இரண்டு கைகளை அடித்து உடைத்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.