தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் மதுரை மாவட்டம் போட்டி எனவும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நகர் முழுவதும் போஸ்டர்கள் போட்டி உள்ளார்கள்.

தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோவையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மதுரையிலும் பூத் கமிட்டி கூட்டமானது நடத்த விஜய் திட்டமிட்டு இருந்தார். அரசியல் மாற்றத்திற்கு புகழ் பெற்ற மதுரையில் அவர் போட்டியிட வேண்டும் எனவும் இங்குள்ள கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்களோடு மக்களாக காட்டுவதற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது கள்ளழகருக்கு விஜய் தண்ணீர் பீச்சி அடிப்பது போன்று போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
இதற்கிடையில் விஜயை குறித்து விதவிதமான கருத்துக்களை கூறிவரும் செல்லூர் ராஜு செக் வைக்கும் வகையில் அவரது மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் எனவும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெறுவார் என மக்கள் முதல்வர் எனவும் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள். தமிழக வெற்றி கழகத்தின் கட்சியினர் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் கோட்டை என கருதப்படும் மதுரை மேற்கு தொகுதி கடந்த மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செல்லூர் ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் திமுகவில் மேற்கு தொகுதி அமைச்சர் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் செல்லூர் ராஜூ பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருகிறது. விளாங்குடியில் நீர் மோர் பந்தல் அகற்றம் பொன்மேனியில் கல்வெட்டில் பெயர் மறைப்பு என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் செல்லூர் ராஜுவை வம்பு இழுக்க துவங்கி உள்ளனர்.