கரூரில் 3 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர் – 2 பேருந்துகளில் காலாவதி மற்றும் முதலுதவி பெட்டி இல்லாத நிலை – அவசர கால கதவை திறந்து மூட முடியாத நிலை – அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து அனுப்பி வைக்கும்படி சென்ற ஆட்சியர் தங்கவேல்.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி பேருந்துகளை கூட்டாய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் ஹேமநாதன், காவல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முதலில் ஆய்வு செய்த பேருந்து குளிரூட்டப்பட்ட பேருந்து என்பதாலும், புது பேருந்து என்பதாலும் அனைத்தும் சரியாக இருந்தது. அடுத்ததாக 2வது பேருந்தை பார்த்த ஆட்சியர் அனைத்தும் ஓரளவிற்கு சரியாக இருப்பதை உறுதி செய்த ஆட்சியர் முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பான் கருவியை ஆய்வு செய்தார்.

இதில் முதலுதவி பெட்டியில் இருந்த மருத்துகள் காய்ந்து போயும், காலாவதி தேதி முடிந்தும் இருந்தது அதனை புதிதாக வாங்கி வைக்க கூறினார். தீயணைப்பான் கருவியும் ஒரு மாத காலத்தில் காலாவதி ஆகவுள்ளதால் புதிதாக வாங்கி வைக்கும்படி அறிவுறுத்தினார். அடுத்ததாக ஒரு தனியார் பள்ளி பேருந்தை ஆய்வு செய்தார். அதில் இருந்த அவசர கால கதவை திறக்கச் சொன்னார், அதனை அதிகாரிகள் திறந்த நிலையில் பலரும் அதனை மூட முயன்ற போது அவை மூட முடியாத நிலை ஏற்பட்டது,
அதனை சரி செய்ய சொன்ன ஆட்சியர் தீயணைப்பானை சோதனை செய்தார் அது காலாவதி ஆகி இருந்தது, முதலுதவி பெட்டியை கேட்டார், அது பேருந்தில் பொறுத்தப்பட்டுள்ளது என்றனர், அதனை திறந்து பார்த்தால் அதில் எதுவும் இல்லை இதனை தொடர்ந்து அனைத்து பேருந்துகளையும் முழுவதுமாக ஆய்வு செய்து அனுப்பி வைக்கும்படி கூறி விட்டுச் சென்றார். இதில் ஆய்வுக்கு வந்த 721 பேருந்துகளில் 26 பேருந்துகள் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்து காட்டும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.





