தமிழக முதல்வர் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணையில் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

முன்னதாக அருங்காட்சியக வாசலில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழக முதல்வரை, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்க தாகூர், அமைச்சர்கள் விஸ்வநாதன், நிர்மல் குமார், சுகாதார அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ குமார், துணை மேயர் நாகராஜ், மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர்.

மதுரையில் வேனில் நின்றபடி மக்களை பார்த்து கை கும்பிட்டபடி வந்தார் தமிழக முதல்வர். சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.





