

*கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சனப்பிரட்டியில் உள்ள விநாயகர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

