

கரூர் காந்திகிராம் பகுதியை சேர்ந்தவர் மதன இலக்கியா. இவர் வெள்ளியணை சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் திலீபன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன.
அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 40 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து அளித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

