• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மண்டல அலுவலகங்களை மேயர் மகேஷ் திறந்து வைத்தார்..,

நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர், உறுப்பினர்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டபோதும். 5_மண்டலங்களில் மூன்று மண்டல அலுவலகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதில். நாகர்கோவிலில் பழைய நகராட்சி அலுவலகம் வளாகத்தில் இன்று வடக்கு, கிழக்கு மண்டல அலுலகங்களை மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ‌

கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணியையும், வடக்கு மண்டல தலைவர் ஜவகரையும்,அவரவர் அலுவலக மண்டல தலைவர் இருக்கையில். மேயர் மகேஷ்,ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இணைந்து அமரவைத்தனர்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சிலதா, மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வகுமார், உறுப்பினர்கள் மீனா தேவ்,அக்சயா கண்ணன்,மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.