• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தேச நலன் காக்க சிறப்பு பிரார்த்தனை..,

நாகர்கோவில், ஒழுகினசேரி அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயில் 21-வது வருடாபிஷேக விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்
தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

இந்தியாவிற்காக எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள் சிறப்பாக பணியாற்றி தேச நலன் காக்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியினை நாகர்கோவில், ஒழுகினசேரி அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயிலில் குமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயில் 21-வது வருடாபிஷேக விழா மற்றும் இந்தியாவிற்காக எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள் உட்பட முப்படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றிடவும், அவர்களின் உடல் நலம் சிறந்து விளங்கவும், தேச நலன் காக்கவும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பெண்கள் 1808 பானைகளில் பொங்கலிடும் விழா இன்று  (09-05-2025) மாலை நடைபெற்றது.  

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இத்திருக்கோவிலில் பெண்கள் அதிகளவில் பங்கேற்று வழிபாடுகளை சிறப்புற நடத்தினர்.  இன்றைய தினம் பெண்கள் பெரும் அளவில் பங்கேற்று 1808 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.  

பொங்கலிடும் நிகழ்ச்சியினையும், பொங்கல் பூஜையினையும் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு 25-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளருமான  எஸ்.அக்சயாகண்ணன் தலைமை வகித்தார்.  

பொங்கலிட வருகை தந்த பெண்கள் பொங்கலுக்குரிய பானை, அரிசி, பூஜை பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.  பின்னர் இதற்கான பூஜை தொடங்கியது.  கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையினை பூசாரி அடுப்பில் நெருப்பை பற்ற வைத்தவுடன் ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து பொங்கல் பூஜையில் பங்கேற்ற பெண்கள் அடுப்பை பற்ற வைத்தனர்.  பொங்கலில் பங்கேற்ற பெண்கள் மஞ்சள், சிவப்பு நிற சேலையினை அணிந்திருந்தனர்.  பொங்கலிட்ட 1808 பெண்களுக்கு அன்பளிப்பாக சில்வர் பாத்திரங்களை  குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் வழங்கினார். 

மேலும் அவர் பொங்கல் பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக நான்கு கிராம் தங்க நாணயத்தை திருமதி.ராஜேஸ்வரிக்கும், இரண்டாம் பரிசாக இரண்டு கிராம் தங்க நாணயத்தை திருமதி.தங்கத்திற்கும், மூன்றாம் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயத்தை திருமதி.ஜெயந்திக்கும் பரிசாக வழங்கினார்.

இவ்விழாவில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் லதாசந்திரன், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்மனோகரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சுகுமாரன், பார்வதி, நாகர்கோவில் பகுதி கழகச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலமுருகன், கொட்டாரம் பேருர் கழகச் செயலாளர் சந்திரசேகர் கழக நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்தியாவிற்காக எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள் உட்பட முப்படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றி தேச நலன் காக்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியினை நாகர்கோவில், ஒழுகினசேரி அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயில் 21-வது வருடாபிஷேக விழாவில் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.