• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் கைது..,

BySeenu

May 8, 2025

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் வடகோவை – பீளமேடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள தண்டவாளத்தில் கற்களை வைத்த 18 வயது நிரம்பாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கைது

கல்லூரி பயின்று பகுதி நேரம் வேலைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்ற நிலையில் அங்கு தண்டவாளத்தில் கற்களை வைத்து உள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களிடம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.