• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விற்பனை செய்வதற்காக சப்கான் கண்காட்சி..,

BySeenu

May 6, 2025

கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொழில் துறைக்கு தேவையான உற்பத்தி பொருட்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்யும் நோக்கில் பொதுத்துறை நிறுவனங்கள்,ராணுவ தளவாட மற்றும் பெரும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை கண்காட்சி சப்கான் 2025 என்ற தலைப்பில் வருகின்ற மே 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 225-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 250-க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10,000-க்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழ்நாடு,டெல்லி கேரளா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி டெல்லி,ஹரியானா, குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

கோவை பகுதியில் உள்ள 2 லட்சம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய தொழிற்சாலைகளுடன் ஒருங்கிணைப்பது இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்று சப்கான் தலைவர் சஞ்சீவி குமார் தெரிவித்தார்.