• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உடன் சென்றவர்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 5, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே முழுமையான தடை அமலில் உள்ளது இதில் யாராக இருந்தாலும் உள்ளே செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது.

அதையும் மீறி நேற்று ஆய்வு என்ற பெயரில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் அவர்கள் சகாக்கள் சர்வ சாதாரணமாக செல்போனை பேசிக்கொண்டு மேலும் செல்போனில் படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது கோவிலின் பாதுகாப்பு நன்முகத்தன்மையை உருவாக்குகிறது மேலும் எப்படி உள்ளே செல்போன் அனுமதித்தார்கள்.

சோதனை செய்யவில்லையா இவர்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆனது எந்த ஒரு விஐபி ஆக இருந்தாலும் உள்ளே செல்போன் அனுமதி கிடையாது என உத்தரவு இருந்த நிலையில் எப்படி இவர்கள் செல்போனை உள்ளே அனுமதித்தார்கள் அதுவும் அனைவரும் செல்போனை சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டு படம் எடுத்துக் கொண்டும் இருப்பது இணையத்தில் வைரலாகி தற்போது பெரும் பேசும் பொருளாக ஆகி உள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்குமா என பக்தர்களும் இந்து அமைப்பினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்