• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கே. டி. ஆர் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்..,

ByK Kaliraj

May 4, 2025

விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ,சிவகாசி திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது.

அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் படித்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும், முன்னுரிமை கொடுப்பதை பார்த்து எந்த கட்சியின் சேராதவர்கள் , மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

சிவகாசி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இல்லத்தில் நேரில் சந்தித்து அவருக்கு மாலை, சால்வை ,அணிவித்து அதிமுக கட்சியில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார் நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.