சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுகர்வோர் மன்றம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து, “சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அவர் தனது சிறப்புரையில், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், நான்கு சக்கர வாகனங்களில் பாதுகாப்புப் பட்டை அணிதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல், போக்குவரத்து சிக்னல்களைப் பின்பற்றுதல் மற்றும் வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தார். பொறுப்புடன் வாகனம் ஓட்டுவதன் மூலம் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் தனது தலைமையுரையில், இளைஞர்களின் வாழ்க்கையில் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, பொறுப்புள்ள சாலைப் பயனாளர்களாக விளங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சிவகாசி நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் கல்லூரியும் நுகர்வோர் மன்றமும் மாணவர்களுக்காக இத்தகைய முக்கியமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததைப் பாராட்டினார். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “சாலைப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகள் மூலம் மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு குறித்த தங்களது கருத்துகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வேலுமணி வழங்கினார்.
நிகழ்வில் முன்னதாக, இளங்கலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் மாணவி ஸ்வாதி வரவேற்புரையாற்றினார். இளங்கலை மூன்றாமாண்டு வணிக கணினி பயன்பாட்டியல் மாணவி கார்த்திகா லட்சுமி நன்றியுரை வழங்கினார். இந் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவிப் பேராசிரியர், மாரியப்பன் நன்றி கூறினார்..








