• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா…

ByAnandakumar

Apr 27, 2025

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தர் நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அது சமயம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அது தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் ராகு கேதுக்கு சிறப்பு அலங்காரம் செய்தார். தொடர்ந்து உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு லட்சார்ச்சனை நடைபெற்று தொடர்ச்சியாக ராகு, கேதுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி விழாவை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.