• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஹோட்டலில் பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் இளைஞர் கைது…

குமுளி டவுனில் ஹோட்டலில் இருந்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக கேரள எல்லை குமுளி டவுனில் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் நடந்தது. ஹோட்டலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், மேல் மாடியில் இருந்த அலுவலகத்தின் அலமாரியை உடைத்து ₹50,000 ரொக்கம், கல்லாவில் இருந்த ₹4,000 மற்றும் ₹15,000 மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவற்றை திருடிச் சென்றான்.

ஹோட்டல் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், குமுளி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாருல் இஸ்லாம் (20) என்பதும், இவர் ஏற்கனவே இதே ஹோட்டலில் வேலை செய்தவர் என்பதும் தெரிய வந்தது.

இதை அடுத்து குமுளி எஸ்.ஐ. சுஜித் அறிவுறுத்தலின்படி, ஏ.எஸ்.ஐ சுபைர், சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி சாதிக், சிவில் போலீஸ் அதிகாரி தனேஷ் ஆகியோர் அடங்கிய குழு, குற்றவாளியின் மொபைல் போன் டவர் இருப்பிடத்தை ஆய்வு செய்து, பெரும்பாவூரில் இருந்து குற்றவாளியை கைது செய்தனர்.